Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2024 மே 16 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் புதன்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கற்களைப் போட்டு நிரப்பும் முதற்கட்ட நடவடிக்கைக்காக பாரிய கற்களை கொட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஹென்டர் கனரக டிப்பர் வாகனம் ,கற்களை கடலுக்குள் கொட்டுவதற்காக சென்ற நிலையில் குடை சாய்ந்து கவிழ்ந்தது.
எனினும் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் பொதுமக்கள் ஏனைய கனரக ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கடலுக்குள் விழுந்த வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
01 May 2025