2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

காணிகளை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது பூர்வீக வயல்காணிகளை மீட்டுத் தருமாறு கோரி  தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் திங்கட்கிழமை (13) திங்கட்கிழமை காலை சம்மாந்துறை  மல்வத்தை சந்தியில்   முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திலும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்பல விதசுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி குரல் எழுப்பினர். தமக்கு நேர்ந்த கதியை விளக்கி ஜனாதிபதிக்கு முறைப்பாடு கடிதங்களை அனுப்பி வைத்தனர்.

அவர்கள் கூறுகையில். 1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளில் நிமித்தமாக எமது வாழ்விடங்கள், விவசாயநிலங்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமூகமான நிலையைத் தொடர்ந்து வருகை தந்து பார்த்தோம்.

எம்மிடம் போதுமான ஆவணங்களும் ஆதாரங்களும் இருக்கத்தக்கதாக சுமார்57 பேரின் விவசாயக் காணிகளை அபகரித்திருந்தனர்.  அதேபோன்று மல்வத்தை திருவள்ளுவர்புரம் மக்களில்1990 களில்ஏற்பட்ட அசாதாரண நிலைகளில் இடம்பெயர்ந்து சென்ற11 குடும்பங்களின் குடியிருப்புக் காணிகளை தனிநபர் ஒருவருமாக  அடாத்தாக அபகரித்தார்.

அத்துடன் ஆவணங்களும் ஆதாரங்களும் எதுவும் இன்றிவிவசாயம் செய்து வருவதை அவதானித்தோம். இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேசசெயலகம், அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு ஆளுநர் அலுவலகம் போன்றவற்றில் குறைபாடுகள் செய்தோம் .பலஅரசியல் தலைவர்களை சந்தித்து முறையிட்டோம். 

எதுவித தீர்வும் கிட்டவில்லை. விரக்தியுடன் உள்ளோம். பணபலம்,அரசியல் பலத்தை வைத்து தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்தோம் . தனால் தான் இன்று நாங்கள்  இணைந்து இன்றையதினம் ஜனாதிபதியினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கவனஈர்ப்பை மேற்கொண்டதோடு ஜனாதிபதியினுடைய கவனத்திற்காக எங்களுடைய முறைப்பாடுகளை கடிதங்களை அனுப்பி வைக்கின்ற போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம் என்றனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X