Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மலையகச் சொந்தங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், நல் உள்ளம் படைத்த கனடா வாழ் உறவுகளினால் சேகரித்து அனுப்பப்படும் நிதி உதவியை கொண்டு அம் மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கும் பணியை கருணை நெறி அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
மக்களின் பசி போக்குவதை தமது தலையாய கடமையாக நினைத்து பணியாற்றிய வள்ளலார் பெருந்தகையின் வழியில் பயணிக்கும் தன்னார்வ அமைப்பான கருணை நெறி “பசி போக்க உதவுவோம்” எனும் எண்ணக்கருவுக்கு அமைவாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த பணியை ஆற்றி வருகிறது.
அந்த வகையில் தமது வாழ்வாதாரங்களை இழந்து பெருந் துயரத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்குவது மாத்திரமன்றி, பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவுகள், பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வருவதுடன் வீதியோரங்களில் ஆதரவற்ற நிலையில் காணப்படுகின்றவர்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருவது மாத்திரமன்றி பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சக்கர கதிரைகளையும் கருணை நெறி அமைப்பு வழங்கியுள்ளது.
நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 650 குடும்பங்களுக்கு இவ்வமைப்பினால் இதுவரை உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago