2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கல்...

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில், இன்று (10) காலை நடைபெற்றது.

கந்தப்பளை பொலிஸ் நிலைய சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் ஏற்பாட்டில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்கவின் தலைமையில், நுவரெலியா ஐக்கிய இலங்கை பெண்கள் சம்மேளனத்தின் அனுசரணையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகள், புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், நுவரெலியா பொலிஸ் தலைமையக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.ஜயசிங்க, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்க, சிறுவர் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி டபிள்யூ.ஐ.பி.ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், ஐக்கிய இலங்கை பெண்கள் சம்மேளனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X