2025 மே 05, திங்கட்கிழமை

கல்முனையில் இரத்ததான முகாம்

Freelancer   / 2021 ஜூன் 06 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அங்கு இரத்ததான முகாம், சனிக்கிழமை (05) இடம்பெற்றது

" உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.யும் பங்கேற்றிருந்தது.

 அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டத் தவிசாளர் எஸ்.தஸ்தக்கீர் நெறிப் படுத்தலில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாறை மாவட்டப்பணிப்பாளர் கே.எல்.சுபைரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இம்முகாமில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.

பேரவையின் தேசியத்தலைவர் சஹிட் எம்.றிஸ்மி கலந்து கொண்டு முதலாவது இரத்தம் வழங்கிவைத்தார்.

இவ் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது நூருல் ஹுதா உமர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X