Princiya Dixci / 2020 நவம்பர் 03 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன, ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றில் இன்று (03) காலை ஏற்பட்ட தீப்பரவலால் அக்கடை முற்றாக எரிந்துள்ளது.
இந்தக் கடைக்கு அருகிலுள்ள பெயிண்ட கடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள், பொலிஸாரின் உதவியுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கு பிரிவினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .