Princiya Dixci / 2022 மார்ச் 15 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 29 மில்லியன் ரூபா ய்செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடி வகுப்பறை கட்டடம், இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.
இக்கட்டடத்தை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன்பந்துல சேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் மற்றும் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் இ.கமலராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.



3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago