2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

கே.ஜி.சிக்கியது

Editorial   / 2021 ஜூலை 06 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.ஜி என குறியீட்டு மொழியில் அழைக்கப்படும் கேரள கஞ்சாவை, இலங்கை கடற்படை, வட கடலில் வைத்து, இன்று (06) கைப்பற்றியுள்ளது.  அதன் உள்நாட்டு பெறுமதி 29 மில்லியன் ரூபாயாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தின் கோவில் பகுதிக்கு வடக்கே உள்ள கடல்களில், இலங்கை கடற்படை சிறப்புத் தேடுதல் நடத்தியது. இதன்போது சந்தேகத்துக்கிடமான டிங்கி படகொன்றை கைப்பற்றியது. அதிலிருந்து 98 கிலோ மற்றும் 500 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன், அப்படகிலிருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.  (படங்களும் தகவலும்: இலங்கை கடற்படை)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X