Kogilavani / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையில், கொழும்பு ஆயர் அலுவலகத்தில், நேற்று (17) பிற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
உற்சவ காலத்தில் கிறிஸ்தவர்களையும் அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், பாடசாலைகளை ஆரம்பித்தல் புதிய அரசமைப்பு தொடர்பில் கொழும்பு ஆயர், இதன்போது பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினரின் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மக்களை விழிப்பூட்டுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு ஆயரிடம் தெரிவித்தார்.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago