2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சர்வதேச நடன தின விழா…

Editorial   / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா  களுதாவளை கலாசார மண்டபத்தில் செவ்வாய்கிழமை(29) மாலை நடைபெற்றது.

இந்த சர்வதேச நடன தின விழாவில் இடம்பெற்ற ஆசிரியர்களின் நடன ஆற்றுகைகள் அனைவரினதும் கவனத்தை திரும்பிப்பார்த்த வைத்திருந்தது.

நடன விழாவில் நடன ஆசிரியர்களினாலும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, மாணவர்களினதும் நடனங்கள் மேடையை அதிர வைத்திருந்தன.

பட்டிருப்பு கல்வி வலய  நடன ஆசிரிய ஆலோசகர் வனிதா சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது ஆசிரியர்களினதும், மாணவர்களினதும், நடன நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. இதன் போது ஏற்பாட்டுக் குழுவினால் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

  வ.சக்தி 

           

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .