2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சிவனொளிபாதமலை பருவகாலம் நாளை(14) ஆரம்பம்

Editorial   / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாதமலை பருவகாலம் நாளைய தினம்(14) ஆரம்பமாக உள்ளது.நாளை (14) சனிக்கிழமை ஆரம்பமாக உள்ள சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு இன்றையதினம் (13) பெல்மதுளை கல்பொத்த வெல ஸ்ரீ பாத ரஜமா விகாரையில் 

இருந்து சமன் தேவ விக்கிரகம் மற்றும் புனித தந்ததாது பெரஹர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமா விகாரையில் இருந்து சமன்தேவ விக்கிரகம் மற்றும் புனித தந்ததாது இரத்தினபுரி பலாபந்த, குருவிட்ட. ஏரத்ன, நல்லத்தண்ணி ஆகிய நான்கு வீதி வழியாக பெரஹர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிகழ்வில் சிவனொளிபாதமலையின் பிரதமகுரு பெங்கமுவே தம்மதின்ன மாநாயக்க,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சாந்த பத்மகுமார, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் உட்பட  நீதிமன்ற நீதவான்கள், சப்ரகமுவ மாகாண பிரதி பிரதம செயலாளர் திலினி தர்மதாச, பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், ஆதிவாசிகளின் தலைவர் வன்னில அத்தோ உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 

சிவா ஸ்ரீதரராவ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .