Freelancer / 2023 மே 03 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 131வது ஜனன தினம் இன்றாகும்.
இதனையொட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.பிரதான நிகழ்வாக மட்டக்களப்பு கல்லடியில் விபுலானந்த புரத்தில் அமைக்கப்கட்டுள்ள சுவாமியின் சமாதியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்டகளப்பு 'இராம கிருஸ்ண மிசன் தலைவர் 'மத் சுவாமி நீலமாதவானந்தஜீ மகராஜ் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.சுவாமி விபுலானந்தா நூற்றாண்டு விழாச்சபை செயலாளர் ச.ஜெயராஜ் சபை தலைவரும் முன்னாள் வலய கல்வி பணிப்பாளருமான கே.பாஸ்கரன் காந்தி சேவா சங்க தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விபுலானந்த கீதம் பாடப்படடதுடன் விசேட வழிபாடுகளும் சுவாமியின் சமாதியில் இடம் பெற்றன.
பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்






58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago