2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

Freelancer   / 2021 ஜூன் 10 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் , இன்று (10) முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது, அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட்-19 தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி 23 ஆவது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த ஆகியோர் பிரசன்னமாய் இருந்தனர்.

231 ஆவது படைப்பிரிவின்  கொமாண்டர் வீ.எம்.என்.ஹெட்டியாராச்சி, மண்முனைப்பற்று   பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஏ.எச்.ஏ. ஹுஸைன்

M

ஓட்டமாவடி

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில், டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று (10) ஏற்றப்பட்டது.   எம்.எம்.அஹமட் அனாம்

M

தம்பலகாமம்

கொவிட்19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாடு பூராகவும் இடம் பெற்று வருகின்ற நிலையில், சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணி தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இடம் பெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று(10) தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மலர்விழி ரவிந்திரராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில், பொலிஸார் 142 பேருக்கும், இராணுவத்தினர் 38 பேருக்கும் ஏற்றப்பட்டது.

மொத்தமாக 180 சைனோபாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக  தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸ்பர் ஏ ஹலீம்

M

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .