Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம், இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .