2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

தமிழினப் பற்றாளர் அமரர் மதிசூடிக்கு அஞ்சலி...

Editorial   / 2025 ஜனவரி 08 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

சிறந்த சமூக செயற்பாட்டாளர் தமிழினப் பற்றாளர் அமரர் குலத்துங்கம்  மதிசூடியின் இரங்கல் மற்றும் ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக இடம் பெற்றன.

அதேவேளை,அவரது 41 வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,  பின்தங்கிய பிரதேச நலிவுற்ற மக்களுக்கு அரிசி,சாறி, சாறன், பெட்சீற் உள்ளிட்ட உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.

பொத்துவில் செல்வபுரம், தாண்டியடி, சங்குமண்கண்டி, திருக்கோவில் காயத்ரி கிராமம், சொறிக்கல்முனை, காரைதீவு, குருக்கள்மடம்,தாந்தாமலை கற்சேனை, கல்லடி ஆகிய இடங்களில் இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

கனடாவில் இருந்து இதற்கென வருகைதந்த அவரது மனைவி திருமதி நித்தி மதிசூடி, மருமகன் மாதவன், உற்ற உறவினர்களான மதனராஜன் ,.குணா மற்றும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்த உறவினர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றன.

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார். இணைப்பாளராக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் கீதா ஜெயசிறில் ஆகியோர் செயற்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X