Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டோர்
தமது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாகவும். மாறி மாறி வருகின்ற ஒவ்வோர் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்கவுமில்லை எனவும், தொடர்ந்தும் வீதி வீதியாகத் தாம் தமக்கான நீதிக்காகப் போராடுவதாகவும் கூறினர்.
ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்கள்,அச்சுறுத்தப்படுவதாகவும் அண்மையில் ஊடகவியலாளர்கள் குமணன் மற்றும் கஜகிரீவன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டனர் எனவும் தம்மைப் போன்ற செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகளும், புத்தர் சிலை நிறுவுதல் எனும் போர்வையில் நடைபெறும் அபகரிப்புகளும் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாகவும் கூறினர்.
தமிழர்களுடைய உரிமை, இனப்படுகொலை விவகாரங்களிலும் மற்றும் விசேடமாக செம்மணி போன்ற வடக்கு கிழக்கிலே காணப்படும் மனிதப் புதை குழிகள் விவகாரம் போன்றவற்றிலும் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திலும் மனித உரிமை விடயங்களிலும் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையும் தலையீடும் வேண்டும் எனவும் இந்த மனித உரிமைகள் தினத்திலும் சர்வதேசத்திடம் தமது கோரிக்கைகளையும் முன் வைப்பதாகவும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
கஜனா சந்திரபோஸ்





9 hours ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Mar 2026
14 Mar 2026