2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தியாக தீபத்துக்கு அஞ்சலி…

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணியளவில் நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், தீலிபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள் எனப் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

(படங்கள் - எம்.றொசாந்த், வி.நிதர்ஷன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X