2025 மே 21, புதன்கிழமை

திறப்பு விழா…

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பத்ரியா வித்தியால புதிய கட்டடத் திறப்பு விழா, அதிபர் எச்.எம்.மன்சூர் தலைமையில் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.

அமெரிக்காவின் 95 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமெரிக்காவின் பசுபிக்கட்டளைப் பிரிவின் பிரதித் தூதுவர் ரொபட் ஹில்டன் கலந்துகொண்டார்.

அத்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக், கிழக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பணிப்பாளர் எம்.டி.நிஸாம், திணைக்கள உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X