2025 மே 15, வியாழக்கிழமை

தீப்பந்த பேரணி…

Editorial   / 2021 டிசெம்பர் 10 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

 வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்றுக்காலை ஆரம்பமாகிய குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக பழையபேருந்து நிலையப்பகுதியை சென்றடைந்தது.  அதன்பின்னர், அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  வேண்டும், வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், நீதி கிடைக்கும்வரை போரோடுவோம், நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு போன்ற கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .