2025 மே 15, வியாழக்கிழமை

தோட்ட மக்களுக்கு முன்னுரிமை...

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் அமைச்சின் செயலாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர், உலக சுகாதார ஸ்தாபனத்தின்  இலங்கைக்கான தலைவர் வைத்தியர் அலங்கா சிங் மற்றும்  வைத்தியர் ஒலிவியா கோராசன் நிவேராஸ்ஸை (சுகாதார நிர்வாகி)  சந்தித்து கிழக்கு மாகாண மக்கள் மற்றும் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக்  கலந்துரையாடினர்.


இதன் போது தடுப்பூசி வேலைத்திட்டத்தில் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு முன்னுரிமையளித்து விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு செந்தில் தொண்டமான் அவர்களிடம்  கோரிக்கை ஒன்றை  முன்வைத்தார்.


செந்தில் தொண்டமானின்  கோரிக்கைக்கு சாதகமான முடிவை  வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளது.





 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .