2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தொடர் விபத்து...

Princiya Dixci   / 2016 நவம்பர் 12 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை, 06 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வெயாங்கொடையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக பஸ்ஸொன்று, வீதி சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த சிறிய ரக டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளது.

டிப்பர் வாகனம், அதற்கு முன்னால் நின்ற வானிலும் வானுக்கு அருகில் நின்ற மோட்டார் சைக்கிளிலும், முச்சக்கரவண்டியிலும் மோதியுள்ளது.

டிப்பர் மோதிய வான், முன்னாள் நின்ற காரில் மோதியுள்ளது. இவ்வாறு ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த வாகனங்களுக்கு சிறியளவிலான சேதங்கள் ஏற்பட்டதுடன், விபத்தின் காரணமாகப் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக,  நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X