Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில்…
திருகோணமலை மாவட்ட நத்தார் விசேட பூஜை ஆராதனை லிங்கன்நகர் அன்னை தெரேசா இல்லத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நத்தார் விசேட திருப்பலி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குறிய கிறிஸ்டியன் நொயேல் இமானுவேல் ஆண்டகையால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. (எப்.முபாரக் )
முல்லைத்தீவில்…
பூரண பாதுகாப்புக்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு ஆலயங்களில் பாலன் பிறப்பு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. (சண்முகம் தவசீலன்)
ஹட்டனில்…
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் விசேட ஆராதனை திருபலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ( எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன் )
நீர்கொழும்பில்…
நீர்கொழும்பு ஏத்துக்காலை புனித புனித சில்வெஸ்டர் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனை நடைபெற்றது.
கொழும்பு மறைமாவட்ட தமிழ் துணை ஆயர் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை தலைமையில் நள்ளிரவு ஆராதனை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (எம்.இஸட்.ஷாஜஹான்)
இராகலையில்…
இராகலை நகரில் வரலாற்று சிறப்பு மிக்க சந்தனமாதா ஆலயத்தில் வழிபாடுகளில் 50 பேர் பங்குப்பற்றலுடன் கட்டம் கட்டமாக, மக்கள் ஆலயங்களுக்குள் உள்வாங்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெறுகின்றன. (ஆ.ரமேஸ்.)
கண்டி லைட் ஹவுஸ் தேவாலயத்தில்...
கிறிஸ்மஸ் நத்தார் பண்டிகை விசேட ஆராதனை, கண்டி பூரணவத்த லைட் ஹவுஸ் தேவாலயத்தில் வணக்கத்திற்குரிய பிரதான போதகர் குட்வின் சிவராஜாசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
வணக்கத்திற்குரிய பிதா முத்துக்குமார் நிரோசன் கரோல் கீதம் இசைப்பதையும் அடியார்கள் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.
(படங்கள்- இக்பால் அலி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago