2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நீர்க்காகங்கள்…

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உட்பட 26 நாடுகளின் முப்படை வீரர்கள் கலந்துகொண்ட நீர்க்காகக் கூட்டுப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு, திருகோணமலை - குச்சவெளியில் நேற்று (23) மாலை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 266 முப்படை அதிகாரிகளும் 2,610 வீரர்களும், சர்வதேச நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 34 அதிகாரிகளும் 50 வீரர்களும் பங்கேற்றனர்.

பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான பல்தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், திறமைகளை வழிகாட்டுதல், சிறந்த சந்தர்ப்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நடைபெற்ற பத்தாவது கூட்டுப்பயிற்சி இதுவாகும்.

பாதுகாப்பு பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன  பிரதம அதிதியாகவும், பாகிஸ்தான் இராணுவத்தின் விசேட சேவைகள் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உசைன் மும்தாஸ் விசேட அதிதியாகவும், இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியந்த சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் உட்பட முப்படைகளின் உயர் அதிகாரிகள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

(படங்கள்: அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .