Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 07 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போதும் நிலவிக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலையில், பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல், தென், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆகக் கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அம்மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் வௌ்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யவும் இலங்கைக் கடற்படை 32 நிவாரணக் குழுக்களை களத்தில் இறக்கியுள்ளது.
அதனடிப்படையில், வக்வெல்ல பாலத்தின் கீழ், வெள்ள நீர் வடிந்தோடாமல் தடுத்துக்கொண்டிருந்த கழிவுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கடற்படையும் நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து மேற்கொண்டது.
மரக்கிளைகள், மூங்கில்களுடன், நெடுங்காலம் அழியாத்தன்மை உடைய நெகிழியின் (பிளாஸ்டிக்) குப்பைகளும், வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது.
(கடற்படை ஊடகப்பிரிவு)
மா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago