Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் பங்கேற்றிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வட பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்ஏ. எம்.றியாஸ் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கடந்தாண்டு தேசிய ரீதியில் மாணவர்களிடையே இணைய வழியில் சூழல் பொது அறிவுப் பரீட்சையை நடத்தியிருந்தது.
இப்பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று மாணவர்களும் பசுமை அமைதி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களோடு விசேட சித்தி மற்றும் அதி திறமைச் சித்திபெற்ற மாணவர்களில் ஒரு தொகுதியினர் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கி திப்பளிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் சிவகரன் அபிசாய்ராம் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி ஷண்முஹி கருணாநிதி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த செல்வி டிலுக்சினி டன்ஸ்ரன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்துக்கொண்டார்கள்.
மேலும், 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான பசுமை அமைதி விருதை இயற்கை விவசாயி அல்லைப்பிட்டி மகேஸ்வரநாதன் கிரிசன் பெற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .