Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை
Editorial / 2023 ஜனவரி 23 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் கொழும்பு-7இல் அமைந்துள்ள தாமரைத்தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் அண்மையில் இடம்பெற்றது.
பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்துகொண்டதோடு சிறப்பு அதிதிகளாக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் பைசல் காசிம் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அதேபோன்று இலங்கைக்கான் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் என பல ராஜதந்திரிகளும் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் நிகழ்வில் பிரதம அதிதியான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறப்பு அதிதிகள் மற்றும் கல்லூரியின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் சிறப்புரையாற்றியதுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago