Editorial / 2026 மார்ச் 13 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த "புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் தடுப்பு" (Cancer Early Detection & Prevention Programme) விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் புதன்கிழமை (11) நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.
முக்கிய தலைப்புகளும் விரிவுரைகளும்
இக்கருத்தரங்கில் துறைசார் வளவாளர்களினால் பின்வரும் மூன்று முக்கிய தலைப்புகளில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன:
வளவாளர்கள் மற்றும் அதிதிகள்
கல்முனை பிராந்திய தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம். பௌசாத், பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் யூ. ஹபீப் முஹம்மட், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாத்திமா ஷாபிரா முகம்மட் வாசீம் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ். கரண், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி. மசூத், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ. நபீல் உட்பட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விசேட வேலைத்திட்டம்
கிழக்கு மாகாணம் முழுவதும் புற்றுநோய் தொடர்பாக 100 விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தும் விசேட வேலைத்திட்டத்தை மாகாண சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. அந்த வரிசையில், 4-வது நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago