R.Tharaniya / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
செப்.,7 ம் ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9:57 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1: 27 வரை நீடித்த அரிய முழு சந்திரகிரகணத்தை மக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசித்தனர்.
சூரியன், நிலா மற்றும் பூமி இவை மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிகழ்வது தான் கிரகணங்கள். சூரியனை நிலவின் நிழல் மறைத்தால் அது சூரிய கிரகணமாகும். அதுவே, பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அதற்கு சந்திர கிரகணம் என்று பெயர்.
கடந்த மார்ச்சில் இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் காணப்பட்டது. அதன் பின்னர், முழு சந்திர கிரகணம் செப்.7 இரவு 9.57 மணிக்கு துவங்கியது. நள்ளிரவு 1.27 மணி வரை நீடித்தது. இது மிக நீண்ட சந்திர கிரகணமாகும்.
சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில், காணப்பட்ட முழு சந்திர கிரகணம் 11.42 மணி முதல் 12.33 மணி வரை நடந்தது. இதற்கு பிளட் மூன்(blood moon) என்று பெயர். உலகின் பல நாடுகளில் தெரிந்தது.
இனி அடுத்த சந்திர கிரகணம் 2028ம் ஆண்டு டிச.31ல் தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.















9 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
04 Nov 2025