2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு வரவேற்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அட்மிரல் சபார் மகமூட் அபாஷி, இன்று (27) ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதியை இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் இந்திக பெரேரா, தலைமையக நுழைவாயிலில் வைத்து வரவேற்றதுடன்,  பின்னர் இலங்கை இராணுவ படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

பின்னர் இலேசாயுத காலாட் படையணிக்குரிய ‘கன்டுல’  யானையினால் இவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடற்படைத் தளபதியினால் யானைக்கு பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி  இராணுவ தளபதி பணிமனை நுழைவாயிலில் வைத்து இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் B.V.D.P  அபேநாயகவால் வரவேற்கப்பட்டு பின்னர்  பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட்  ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்திப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார். 

பின்பு இராணுவ தளபதியின் பணிமனைக்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். அதனை தொடர்ந்து இராணுவ தலைமையகத்திலுள்ள மூத்த இராணுவ உயரதிகாரிகளை இராணுவ தளபதி, பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இலங்கை  இராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தாஸ் கடற்படைத் தளபதிக்கு இடையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பரஸ்பர  ஆர்வம், கடல்சார் பிரச்சினைகள், கடல் வழித்தடங்களில் உள்ள சவால்கள் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்பு படையினர்களுக்கு இடையிலுள்ள ஒத்துழைப்பு  திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின்னர் இராணுவ தளபதியால் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி, அவரது வருகையை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் அழைப்பையேற்று இம் மாதம் 25 – 29 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கையின் பிரதமர், மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு செயலாளர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை சந்தித்தார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி மற்றும் துணைப் பணியாளர்கள், மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் குழுவினரும்  இணைந்திருந்தனர்.

இவர் பாகிஸ்தான் கடற்படைத் தளபதியாக 2017 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இவர் பாகிஸ்தான் கடற்படையில் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் எகடமியில் இணைந்து கொண்டு  டார்மவுத் பிரித்தானிய இராஜகிரிய கல்லூரியில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .