2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை

Janu   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையைச் சேர்ந்த பரத் மோகன் நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரேஷ் பரத் மோகன் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார் .அவரது பெற்றோர் அவரை நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சிறு  வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான  பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ஹரேஷ் பரத் மோகன் ராமேஸ்வரம் அடுத்துள்ள சங்குமால் துறைமுகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (05)  காலை தனது பயிற்சியாளர்கள் மற்றும் மீனவர்கள் என 20  பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.

தலைமன்னாரில் வெள்ளிக்கிழமை இரவு 11.37 மணியளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கி  சனிக்கிழமை பிற்பகல் 11.29 மணி அளவில் 11 மணி நேரம் 52 நிமிடம் ஹரேஷ் பரத் மோகன் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை அடைந்துள்ளார்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X