Editorial / 2025 மார்ச் 05 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் பரதாலயா நாட்டியப் பள்ளியின் 23வது ஆண்டு நிறைவையொட்டிய கலைவிழா ஒசானே கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (01-03-2025) இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வாக அரங்கேறிய பொன்னியின் செல்வன் நாட்டிய நாடகம் அனைவரது பாராட்டையும் பெற்றது.
துஷ்யந்தி கிருஷ்ணதாசனினால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்த நாட்டிய நாடகம் அடுத்த தலை முறையின் பங்குபற்றலுடன் அரங்கேறியமை முக்கியமானதாகும். தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது கலைகளை காலத்திற்கேற்ப நவீன வடிவங்களில் ஆக்கங்களாகப் படைக்கிறார்கள் என்பதற்கு இந்நிகழ்வு சான்றாகும்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி 45 நிமிடங்களுக்குள் அமையக் கூடியதாக இந்த நாட்டிய நாடகத்தின் கதையை தெய்வேந்திரன் ஞாலசீர்த்திமீநிலங்கோ எழுதியிருந்தார். அத்தோடு இந்த நாடகத்தின் பிரதியாக்கம், எழுத்துரு, பின்னணி ஒளிக்கோர்வை என்பவற்றையும் மேற்கொண்டிருந்தார். ஒருவரலாற்றை, அதன் கதையை செம்மையாக சாதாரண மொழியில் இசையோடு கலந்து நாட்டிய நாடகமாகப் படைத்தமையானது பார்வையாளர்களால் மெச்சப்பட்டது.
இந்த நாட்டிய நாடகத்தைத் தன் கதைசொல்லலால் தாங்கிநின்றவர் நிமல் யூலியஸ் அந்தனி. தேர்ந்த கதை சொல்லியாக, தனது குரலாலும் பின்னணி இசையாலும் நாட்டிய நாடகத்தை செம்மையாக நகர்த்திச் சென்றிருந்தார்.
45 நிமிடத்தில் தனது மாணவர்களின் நாட்டியத் திறமையையும் தனது நெறியாள்கைத் திறனையும் முழுமையாக வெளிப்படுத்தி உள்ளங்கவர் படைப்பாக இந்தநாட்டிய நாடகத்தைத் தந்தார் துஷ்யந்திகிருஷ்ணதாசன்.
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய செந்தூர்வாசன் சிங்காரவேல் குறிப்பிட்ட ஒரு விடயம் கவனிப்புக்குரியது. 'எமதுமொழியையும்;,பண்பாட்டையும் அடையாளங்களையும் அடுத்ததலைமுறைக்குக் கடத்தும் பாரியபொறுப்பு எமக்குண்டு. இவ்வகையான கலை நிகழ்வுகள் அதற்கு பாரியபங்களிப்பைச் செய்கின்றன. கற்றலுக்கு வெளியே இணைந்த செயற்பாடுகள் எமது அடுத்ததலை முறையினரை ஒரு சமூகமாக தங்கள் அடையாளங்களை உணரச் செய்யும். குறிப்பாக பல் பண்பாட்டுச் சூழலில் வளரும் எமது பிள்ளைகளுக்கான இவ்வாறான பண்பாட்டு நிகழ்வுகள் முக்கியமானவை.'
பேர்கன் போன்றசிறியநகரொன்றில் மிகவும் குறைந்தவளங்கள், மிகக்குறைவான புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் 40 மாணவர்களின் பங்குபற்றலுடன் 45 நிமிடங்கள் நீளுகின்றஒருநாட்டியநாடகத்தைச் செய்வது இலகுவானதல்ல. ஆனால் எல்லாசவால்களையும் தாண்டிபரதாலயாவும் அதன் இயக்குனர் துஷ்யந்தி கிருஷ்ணதாசனும் இதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இது ஏனையோருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும். புலம்பெயர் தேசங்களில் இவ்வகையானமுயற்சிகள் நம்பிக்கைதருவதாக உள்ளன.




17 minute ago
28 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
32 minute ago
44 minute ago