2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்துக்கு ஒருவருடம் பூர்த்தி

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தின் அரசியல் உரிமை மற்றும் குடியுரிமையை மீண்டும் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அக்கட்சியினால் முன்னெடுக்கப்படும்

தொடர்ச்சியான அமைதிப் போராட்டம் ஒரு வருடத்தை நிறைவுசெய்துள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. 

“அரசியல் கட்சியொன்றினால் இலங்கையில் மிகவும் அமைதியான முறையில் நீண்ட காலம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இது” என அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 

முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் புபுது ஜாகொட உள்ளிட்டவர்கள் நேற்று நடைபெற்ற ஒரு வருடப் பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X