Janu / 2025 ஜனவரி 28 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளை சஞ்சரிப்பதை அவதானிக்க முடிகிறது.
அதில் Australian White Ibis என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பறவை இனம் வருடத்தில் டிசம்பர் ஜனவரி, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீண்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் சூழலியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறித்த பறவைகள் தற்போது இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு அடைகாத்து குஞ்சுகளை பஸ் பொரித்துள்ளது.குறித்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் காணமுடிகின்றது.அதன் தசைகளும் பலரையும் கவர்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு தரும் குருக்கள்மடம் ஏத்தாலைக் குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்





21 minute ago
32 minute ago
36 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
36 minute ago
48 minute ago