Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ், பா.திருஞானம்
தங்களுக்கான சம்பள உயர்வை உடன் வழங்குமாறு கோரியும், கடந்த ஒன்றரை வருடமாக இழுபறி நிலையிலுள்ள கூட்டொப்பந்தத்தை இரத்து செய்யுமாறும் கோரியும், மலையகத்தில் ஐந்தாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன.
ஹட்டன் பகுதிக்கு உட்டபட்ட தொழிலாளர்கள் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதி மற்றும் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் அவ்வீதிகள் வழியான போக்குவரத்தும் பல மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
இதன்போது தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜதுரையின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கொட்டகலை, பத்தனை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 42 தோட்டங்களில் வசித்து வரும் ஐந்தாயிரம் தொழிலாளர்கள், கொட்டகலை நகரத்தில் வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன். இத்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கொட்டகலை நகரவாசிகள் சில மணிநேரம் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago