Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 23 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முள்ளியவளை பிரதேசத்துக்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில், மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டு குழுவினால் இன்று (23) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக முள்ளியவளை முதன்மை வீதியில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் பொதுச்சுடரினை முன்னாள் போராளி அச்சுதன் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர் நினைவுரையினை முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தன், பிரதேச சபைஉறுப்பினர்களான க.தவராசா, கெங்காதரம், மற்றும் முன்னாள் போராளிகளான மாதவமேஜர்,அச்சுதன், சமூகசெயற்பாட்டாளர்களான சிவமணிஅம்மா,சைகிலா,சகுந்தலா ஆகியோர் நிகழ்தியுள்ளார்கள்.
இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பதற்காக, அழைத்து வரப்பட்ட போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படைமுகாமில் இருந்து படையினர் காணொளி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
51 minute ago