2025 ஜூலை 19, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

சுகாதார அமைச்சின் அனுசரணையில், நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு, மோட்டார் சைக்கிள்கள் நேற்று (30) வழங்கி வைக்கப்பட்டன.

நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றும் பொதுசுகாதார அதிகாரிகள் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சில இடங்களுக்கு வாகனங்களில் செல்ல முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டே   மோட்டார் சைக்கிள்களை சுகாதார அமைச்சு வழங்கி வைத்துள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கடமைற்றும் 33 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு, நுவரெலியா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் இமேஸ் பிரதாபசிங்ஹ, மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X