2025 மே 01, வியாழக்கிழமை

யானைகளின் வருகை அதிகரிப்பு...

Princiya Dixci   / 2021 மார்ச் 15 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியின் ஊடாக நிந்தவூர் மற்றும் காரைதீவு   பகுதி வீதியின் ஒரு மருங்கில் யானைகள் உலா வருகின்றமை அதிகரித்துள்ளது. 

பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என சுமார் 17க்கும் அதிகமான யானைகள், அப்பகுதியில்  உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி நேற்றும் (14) படையெடுத்திருந்தன. 

இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி அடிக்கடி வருகை தரும் யானைகள், ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்து வருவதுடன், போக்குவரத்துத் தடைப்படுகின்றது. மேலும், இப்பிரதேசத்தில் தினந்தோறும் வயல்வெளிகளில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதாலும் காட்டில் உள்ள யானைகள் வெளிவந்த நிலையில், அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுகின்றன. 

(படங்கள் - பாறுக் ஷிஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .