Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2021 ஜனவரி 03 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைபொரஸ்ட் இல 01இல், மாணவர்களின் வாசிப்புத் திறனையும் கல்வி வளர்ச்சியையும் அதிகரிக்கும் நோக்கில், லயன் அறையில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளனர்.
செந்தமிழ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்,சிறகுகளின் கிராமிய நூலக வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (3) சனிக்கிழமை இந்நூலகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நூலகமானது புதிய இடமொன்றுக்கு இடமாற்றப்படும்வரை, லயன் அறையிலேயே இயங்கவுள்ளது.
இந்நிகழ்வில், சிறகுகளின் மலைநாட்டுச் செயலாளர் அசோக், பிராந்திய இணைப்பாளர்களான ராம்கி,நடராஜ், அருணோதய கல்லூரியின் அதிபர் டயஸ்குமார், பாம் நிறுவன அதிகாரிகளான கனகராஜ்,கவிசாந்தன், காயத்திரி, ஆசிரியை கிருஷாந்தி, ஹைபொரஸ்ட் மக்கள் அடிப்படை அமைப்பின் தலைவி சுமித்திரா, பொருளாளர் மணிவண்ணண் மட்டும் செந்தமிழ் இளைஞர் கழக. உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago