2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

வரவேற்பு…

Princiya Dixci   / 2021 ஜூலை 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 25 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து நேற்று (07) நண்பகல் 12.15 மணியளவில் வெளியேறிய பிரசாந்தனுக்கு, அவரது ஆதரவாளர்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே.யோகவேல் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜ் மற்றும் ஆதரவாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2020.06.08 அன்று, காத்தான்குடி பொலிஸாரால் பிரசாந்தன் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொவிட் 19 அச்ச சூழ்நிலையினால் அவருக்குப் பிணையில் வழங்கப்பட்டுள்ளது.

(படங்கள் - க.விஜயரெத்தினம், வா. கிருஷ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X