Editorial / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபிலவு ஊடாக வற்றாப்பளை செல்லும் வீதியில் இரு இடங்களில் மழைவெள்ளம் வழிந்தோடுவதால் வீதியால் மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
முத்தையன் கட்டு குளத்தின் நீர், பேராறு ஊடாக கள்ளியடி பகுதியில் இருவேறு இடங்களில் பாலத்தின் மோலால் பாய்கின்றது. இந்த இடங்களில் உந்துருளியில் கூட பயணிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கள்ளியடி பாலத்திற்கு அருகில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்று முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கள்ளியடி வயல்வெளிபகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கள்ளியடி பாலங்கள் ஊடக மழைவெள்ளம் நந்திக்கடலினை சென்றடைகின்றது.
முத்தையன் கட்டு குளத்திற்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வான்கதவுகள் மேலும் திறக்கப்படலாம் அதனால் இந்த வீதி ஊடாக பயணிப்பவர்கள் அவதான செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செ.கீதாஞ்சன்




15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025