2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் சுற்றிவளைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில், இன்று (16) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்குவாத பொருள்கள் பலவற்றை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

வாழைச்சேனை பொது மைதானத்தில் அமைக்கப்பட்ட விசேட சந்தையில் வாழைச்சேனை பிரதேச சபையும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரும் இணைந்து பொருட்களின் தரங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், பிரதேச சபை செயலாளர் திருமதி பி.லிங்கேஸ்வரன், பிரதேச சபையின் வருமான பரிசோதகர் எம்.எம்.எம்.ஜெஸ்லின், வாழைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் பரிசோதனை நடவடிக்கையில்; ஈடுபட்டனர்.

இதன்போது பாவனைக்கு உதவாத கருவாடுகள், மரக்கறிகள் என்பன அகற்றப்பட்டன.

அத்துடன் ஒதுக்கப்பட்ட இடங்களிலல்லாது, வீதிகளில் வியாபாரம் செய்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்கள், தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்வதற்கு பணிக்கப்பட்டனர். 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X