Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 16 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படை நலனுக்காக தங்கள் தொழில்துறையை தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல் போன்ற காரணங்களை கொண்டு சிறந்த விமானப்படை வீரவீராங்கனைகள் தெரிவு செய்யும் விழா, கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பங்கேற்பில் கட்டுநாயக்கவில் ஈகிள்ஸ் லகுன் வீவ் மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது.
பாரம்பரிய முறையில் தீபம் ஏற்றபட்டு 2 நிமிட மௌன அஞ்சலியிடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில், விமானப் படையின் நடனக் குழுவினரின் கலாச்சார நடனமும் இடம்பெற்றது.
நிகழ்வின் ஏற்பாட்டு குழுவின் தலைவர் எயார் கொமடோர் லசித சுமணவீரவினால் விமானப்படை தளபதி உட்பட அனைத்து விருந்தினர்களும் வரவேற்கப்பட்டனர்.
2021ஆம் ஆண்டில் தமது தொழில் பிரிவில் சிறந்த சேவையாளர்களை அந்த பிரிவின் பணிப்பகம் மூலம் தெரிவுசெய்து கடந்த வருடம் தங்கள் தொழிலைத் தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல் போன்ற விடயம்களில் ஈடுபட்ட சிறந்த படைவீர, வீராங்கனைகள் இன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இதில் சிறந்த விமானப்படை வீரராக கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானம் பழுதுபார்க்கும் படைப்பிரிவை சேர்ந்த மாஸ்டர் வாரண்ட் அதிகாரி ஈ .எம் ஜீ .ஐ . தயாபெமா மற்றும் சிறந்த விமானப்படை வீராங்கணையாக வவுனியா விமானப்படை தளத்தில் 23ஆம் ரெஜிமென்ட் படைப்பிரிவில் பணிபுரியும் கோப்ரல் விக்ரமசிங்க எஸ்.சீ.எஸ் .எம் .கே. ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கான வெற்றிக் கோப்பையை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன வழங்கிவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
2 hours ago