2025 மே 17, சனிக்கிழமை

விவசாயத்துக்காக காத்திருப்பு...

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு, சுழற்சி முறையில் விவசாய நிலங்களுக்கு செல்ல இன்றிலிருந்து (08) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் அரசிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, சுகாதாரத் துறையினரின் அறிவறுத்தலுக்கமைவாக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டுமெனக் கோரி, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக பசளை மற்றும் கிருமிநாசினிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருந்தமையை படங்களில் காணலாம். 

(படங்கள் -  வி.சுகிர்தகுமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .