Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 மே 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 அரச வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இலங்கை பொலிஸ் பௌத்த மற்றும் மத அலுவல்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பக்திப் பாடல் நிகழ்ச்சி புதன்கிழமை (22) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றதுடன், இதனைக் கண்டுகளிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டுள்ளார் .
இலங்கைப் பொலிஸ் மேற்கத்தேய வாத்தியக் குழுவின் இசையுடன் மற்றும் இலங்கைப் பொலிஸ் கலாசாரப் பிரிவின் நடனத்துடன் வண்ணமயமான இந்த பக்திப் பாடல் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் மற்றும் கலைஞர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த வெசாக் பக்திப் பாடல் நிகழ்ச்சியைப் பார்வையிட கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago