2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெளிஓயாவில் ஆர்ப்பாட்டம்…

Editorial   / 2021 ஜூன் 15 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முடக்கப்பட்டுள்ள வெளிஓயா மேற்பிரிவு மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வலியுறுத்தும் வகையில்,  தோட்ட பிரதான வீதியில், இன்றுக்காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  

அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு உட்பட்ட வெளிஓயா  தோட்டம், கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் காலவறையின்றி முடக்கப்பட்டது.

இந்நிலையில், தமது பொருளாதாரத்தை இழந்த வெளிஓயா தோட்ட மக்களுக்கு  சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால்  வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப்பொருட்கள் வழங்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி,தோட்ட நிர்வாகமோ எவ்வித நிவாரண உதவிகளும் இதூவரையும் வழங்கவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வட்டவளை மற்றும் ஹட்டன் பொலிஸார் வருகைத் தந்திருந்ததுடன் சுமார் ஒரு மணிநேரத்தின்   பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். (எம்.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .