2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளால் ஆர்ப்பாட்டம்

Mayu   / 2024 ஜூன் 16 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க வேலைகளை வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (16) திகதி ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

ஹட்டன் நகர மையத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஹட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

தற்போது தோட்ட பகுதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு வேலை அற்ற நிலையில் இருக்கும் பட்டதாரிகளை ஆசிரியர் பதவிகள் வழங்க முடியும் எனவும் ஆர்பாட்டத்த்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பல்வேறு அரசுப் பணிகளுக்காக பட்டதாரிகளாக உள்ள தமக்கு அந்தப் பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செ.தி. பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X