2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விளம்பர பதாகைக்கு சேதம்...

Kogilavani   / 2016 நவம்பர் 07 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் வீதியோர விளம்;பர பதாகைகள் இரண்டு, இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இச்சம்பம் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கிழிக்கப்பட்ட விளம்பர பதாகைகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறினே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் மற்றும் எம்.உதயகுமார் ஆகியோரது உருவப்படங்கள் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X