2025 மே 01, வியாழக்கிழமை

2,700 குடும்பங்களுக்கு நிவாரணம்...

Editorial   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வ.சக்தி 

மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ள நிவாரணப் பொதிகள் 2,700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(29) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மண்டூர் பிரதேச மக்களுக்கு  இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு போரதீவுபற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கதான்  அவர்களின் மேற்பார்வையின் கீழ்  மண்டூர் -1, மண்டூர் - 2, மண்டூர் - 3, மண்டூர் தெற்கு, கோட்டைமுனை, பாலமுனை, தம்பலவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 2700 குடும்பங்களுக்கு 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் நிவாரண பொருட்கள்  இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .