2025 மே 02, வெள்ளிக்கிழமை

இலங்கையருக்கு செவாலியர் விருது

Super User   / 2011 ஜூன் 27 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சு அரச சேவையில் நீண்ட காலம் பணியாற்றிய இலங்கை பிரஜையை பிரான்ஸ் அரசு இன்று கௌரவித்தது.

கடந்த 2007ஆம் ஆண்டு பிரெஞ்சு அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற நாகநாதன் வேலுப்பிள்ளை, இலங்கைக்கான பிரேஞ்சு தூதுவர் திருமதி கிரிஸ்டின் ரொபின்ஸனினால் இன்று திங்கட்கிழமை  செவாலியர் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டார்.

ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, சிங்களம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர், பல தசாப்தங்களாக இலங்கை மற்றும் பிரெஞ்சு  அரச சேவையில் கடமையாற்றியுள்ளார். இவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.

செவாலியர் விருது திறமை அடிப்படையில் பிரான்ஸ் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. Pix By: Kushan Pathiraja


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X