2025 மே 12, திங்கட்கிழமை

3000 நாட்களை எட்டிய போராட்டம்

R.Tharaniya   / 2025 மே 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் 3000 நாட்களை, புதன்கிழமையுடன் (07)  எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில்  சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து மூவாயிரம் நாட்களை கடக்கும் நிலையில் அவர்களது ஆர்ப்பாட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றன.

இதனையடுத்து புதன்கிழமை (07) அவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை  ஏந்தி இருந்ததுடன், சர்வதேச நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்.
க. அகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X